Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM!!

#image_title

இந்தியாவில் முதல் இடத்தையும், உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM(இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) ; பேராசிரியர்கள் மாணவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என சுற்றுலாத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் பெருமிதம்.

அமெரிக்காவைச் சேர்ந்த (CEO WORLD MAGAZINE) பத்திரிக்கை வெளியிட்டுள்ள தரவரிசையில் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையின் படி “சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகள்” என்ற பிரிவின் கீழ் சென்னை – IHM (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) கல்லூரி உலக அளவில் 13 வது இடத்தை பெற்றுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழக அரசின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறையின் முதன்மைச் செயலர் சந்திரமோகன் கூறியதாவது.

Chennai – IHM எனப்படும் ( சென்னை -இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) கல்லூரி இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் கடந்த 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு உலக அளவில் இந்த நிறுவனம் 38 வது இடம் பிடித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது அமெரிக்காவைச் சேர்ந்த CEO WORLD MAGAZINE எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவரிசையில் உலக அளவில் 13 வது இடத்தையும் இந்திய அளவில் முதல் இடத்திலும் பிடித்துள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக CEO WORLD MAGAZINE தரவரிசையில் இடம் பிடித்துள்ள இந்நிறுவனம் தற்பொழுது 13 வது இடத்தை பெற இதன் பேராசிரியர்கள் , மாணவர்கள் என அனைவரின் உழைப்பும் தான் காரணம்.

இக்கல்லூரியில் தற்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள் இங்கு பயின்று வெளியில் செல்லும் மாணவர்கள் அனைவருக்குமே, 100% வேலை வாய்ப்பு உத்தரவாதம் இருக்கிறது.

அதோடு பிஎஸ்சி, எம் எஸ் சி (விருந்தோம்பல் நிர்வாகம் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) படிப்புகளுக்கு வரும் ஆண்டிற்கான சேர்க்கையும் துவங்க இருக்கிறது மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Exit mobile version