Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகர் ரண்வீர் சிங்!

பிரபல பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகர் ரண்வீர் சிங்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரண்வீர் சிங்கின் சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாய்ப் பரவி வருகின்றன.

நடிகர் ரன்வீர் சிங் தனது சமீபத்திய பத்திரிகை முதலட்டைப் புகைப்படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெளியாகியுள்ள புகைப்படங்களில், ரன்வீர் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக துருக்கிய விரிப்பில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் அவரின் பிறப்புறுப்பு வெளிப்படாத வண்ணம் அழகியல் தன்மையோடு எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிர்வாண போஸ் சம்மந்தமாக பேப்பர் இதழில் ரண்வீரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதில் “உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது எனக்கு மிகவும் எளிதானது, எனது சில நிகழ்ச்சிகளில் நான் நிர்வாணமாக இருந்துள்ளேன். என் ஆன்மாவை நீங்கள் பார்க்கலாம். அது எவ்வளவு நிர்வாணமானது? அது உண்மையில் நிர்வாணமாக இருக்கிறது. ஆயிரம் பேருக்கு முன்னால் நான் நிர்வாணமாக இருக்க முடியும்,”என்று அவர் பேட்டியில் கூறினார்.

வழக்கமாக ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் இதுபோல பத்திரிக்கைகளுக்காக அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண போஸ்கள் கொடுப்பது வாடிக்கை. அந்த பட்டியலில் இப்போது ரண்வீர் சிங் இணைந்துள்ளார்.

ரண்வீர் சிங் பாலிவுட் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர். நடிகை தீபிகா படுகோனை சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் அவர்கள் சமீபத்தில் இணைந்து நடித்த 83 திரைப்படம் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை.

Exit mobile version