Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கற்பழிப்பு வழக்கில் பாஜக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார் – விசாரணை தீவிரம்

கற்பழிப்பு வழக்கில் பாஜக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார் – விசாரணை தீவிரம்

சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் முன்னாள் பாஜக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார். இதனையடுத்து கற்பழிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்துக்கு சொந்தமான உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த் மீது கற்பழிப்பு புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் சின்மயானந்திடம் கடந்த 12- ஆம் தேதி இரவு விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர். எனினும் வழக்கு சம்பந்தப்பட்ட பல தடயங்கள் அங்கிருந்து மறைக்கப்பட்டிருப்பது அப்போது நடத்திய சோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், விசாரணை முடியும் வரை ஷாஜகான்பூரை விட்டு வெளியேறக்கூடாது என சின்மயானந்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தான் சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவி, அதற்காக தன்னிடம் இருந்த ஆதாரங்களை நேற்று போலீசாரிடம் அளித்தார். இதில் 48 வீடியோ பதிவுகள் அடங்கிய ‘பென் டிரைவும்’ அடங்கும் என விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து முன்னாள் பாஜக அமைச்சருக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version