சீனாவுடன் லடாக்கில் போரிட தயாராகும் ரஃபேல் போர் விமானங்கள்!!

0
154

இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் கிழக்கு லடாக் எல்லையில் போரிடுவதற்கு தயாராகி வருகின்றன.

இதற்காக, அந்த விமானம் ஹிமாச்சல பிரதேசத்தின் கரடுமுரடான மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்து தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இந்தியா-சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும் எல்லைக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக இருக்குமாறு கிழக்கு மற்றும் மத்திய மண்டல ராணுவத் தளபதிக்கு தலைமை தளபதி எம்எம் நரவனே கடந்த சில நாட்களுக்கு முன் அறிவுறுத்தினார்.

இதேபோல் அரபிக் கடல் பகுதியிலும் சீன போர் கப்பல் நடமாட்டம் இருக்கிறதா என கண்காணிக்குமாறு இந்திய கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதிக தொழில் நுட்பம் கொண்ட இந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய ராணுவ படைக்கு கூடுதல் திறன் கிடைத்துள்ளது என்றும், இனி இந்தியாவை தீண்டுவதற்கு பிறநாடுகள் அச்சப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.