Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரிட்டன் செல்வோருக்கு அரிய வாய்ப்பு -அரசு சூப்பர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திய, வெளிநாட்டு பயணிகள் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய, நாடான பிரிட்டனில் கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. இதில் அடுத்த மாதம் 11ம் தேதி வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழுமையாக, கரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணியர் பிப்ரவரி மாதம் 11ம் தேதி முதல் எவ்வித பரிசோதனையும் இன்றி பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுவர் என பிரிட்டன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனிமைப் படுத்திக் கொள்ளுதல் ,பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர்; தங்கள் பயணத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லா சான்றுடன் வரவேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களுக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version