Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராஷ்மிகா வுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு! அடுத்த திரைப்படம் இவருடன் தான்!

தெலுங்கில் மிக முக்கிய நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா மிக அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவராக இருக்கிறார். அவருடைய போஸ் ஒவ்வொன்றும் மிகவும் அழகாக இருப்பதால் அதன் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்.

இவர் அண்மையில், நடிகர் கார்த்தியுடன் ஒன்றிணைந்து சுல்தான் என்ற திரைப்படத்தை நடித்திருந்தார். இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியானதால் எல்லா மொழிகளிலுமே மிகப்பெரிய போட்டியாக இந்த திரைப்படம் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.

அண்மையில் பாலிவுட் திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்த சூழ்நிலையில் தன்னுடைய சம்பளத்தை 3.5 கோடியில் இருந்து பத்து கோடி ரூபாயாக உயர்த்தி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அரசியல் மற்றும் திரில்லர் ஐ அடிப்படையாக கொண்டு வெளியாக இருக்கின்றது இந்த திரைப்படம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படம் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இருக்கின்ற திரைப்படம் எனவும், அதில் புதிய நாயகனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும்,, தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version