Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து இணையதள முகவரியையும் தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று (டிச. 5) முதல் 20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவியாளரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version