குடும்ப அட்டைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களையும் வழங்கி வருகிறது.
தற்பொழுது, இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் விதமாக இ கே ஒய் சி சரி பார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான கால அவகாசமாக செப்டம்பர் வரை கூறியிருந்த நிலையில், அதன் பின்னர் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
கால அவகாசமானது கொடுக்கப்படும் பலர் தங்களுடைய இகேஒய்சி முறையை சரி பார்க்காமல் இருப்பதால் கடைசி முறையாக டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் கேஒய்சி அப்டேட் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை ரேஷன் கடைகளில் சமர்ப்பிக்கலாம் எனவும், இல்லையென்றால் https:/tnpds.gov.in என்ற ஆன்லைன் முகவரியிலும் அப்டேட் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே இந்தியாவில் இதுவரை 5.8 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதாவது போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்கும் விதமாக ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் எனவும் குறிப்பாக இ கேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது.
டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்கவில்லை என்றால் அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.