ட்விட்டரில் குஷ்பு தெரிவித்த அதிரடி கருத்து! மக்கள் கடும் எதிர்ப்பு!

0
122

நாடு முழுவதும் நோய் தொற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக, தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் பற்றாக்குறை காரணமாக, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தடுப்பூசி செலுத்தும் பணியை அனைத்து மாநில அரசுகளும் மிகத்தீவிரமாக செய்துவருகிறார்கள். இந்தநிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்ற விதிமுறையை அந்தந்த மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

 

அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது பலரின் மத்தியிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. தடுப்பூசியை அவரவர்கள் விருப்பப்பட்டு வந்து போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதனை கட்டாயப்படுத்தி அனைவருக்கும் செலுத்துவது மிகவும் தவறு என்ற கருத்து பரவலாக உலவி வருகிறது.

இந்த நிலையில், தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் பிறகு வந்தால் தான் நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்கலாம் என்று தெரிவித்தால் நிச்சயமாக எல்லோரும் தடுப்பூசியை போட்டு கொள்வார்கள் எனவும் குஷ்பு தன்னுடைய வலைதளப் பதிவில் தெரிவித்து இருக்கிறார். அவருடைய இந்த கருத்து மாநில மக்களிடையே விவாத பொருளாக மாறியிருக்கிறது.