Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் பொருள் பறிமுதல் !!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதி வழியாக, கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற மினி டெம்போவை நிறுத்த கூறினார் .ஆனால், மினி டெம்போவை நிறுத்தாமல் சென்றதனையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள், மினி டெம்போ வாகனத்தைத் துரத்திச் சென்று குழித்துறை பகுதியில் மடக்கிப் பிடித்தனர். இதனை அறிந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.அப்போது வாகனத்தை வருவாய் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 2.5 டன் அளவிலான ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்திச் செல்ல முயன்றதாக தெரியவந்தது. வாகனத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், அரிசி காப்பு காடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் ஒப்படைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version