எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

Photo of author

By Anand

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த காவலர்களை கண்டதும் சம்பந்தப்பட்ட அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். காவலர்கள் அங்கு சென்று பார்க்கும் போது 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே போலீசார் சுமார் 1 டன் ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றவர்கள் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version