20 வருடங்களாக பூட்டி கிடக்கும் ரேஷன் கடை :! விசாரித்தபோது வந்த அதிர்ச்சி காரணம் !!

0
147

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புதுநல்லாகவுண்டம்பட்டி என்ற பகுதியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டுமென்றால், நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலையில், வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் , அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ஒரு புதிய ரேஷன் கடைகளை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்ற மாநில அரசு, 20 வருடங்களுக்கு முன்பு புதுநல்லாகவுண்டம்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடையை கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 20 வருடங்களாக அந்த ரேஷன் கடைகள் திறக்கப்படாமல் உள்ளது .இந்த கடைகளை திறந்தால் அருகில் வசிக்கும் தலித் சமூக மக்களும் வந்து ரேஷன் பொருட்கள் வாங்க செல்வார்கள் என்ற காரணத்தினால் அந்த புதிய ரேஷன் கடை இன்னும் திறக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற புகாரையும் பொதுமக்கள் முன் வைத்தனர்.

கடந்த 20 வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள ரேஷன் கடையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தங்களது சிரமத்தை குறைக்க அரசு எடுக்கும் ஒரு முடிவாக இது அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.