இனி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை.. மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க!!

0
94
ration-shop-on-sundays-too-happy-for-sugar-goats

தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு பல துறைகளில் நல்ல செய்திகளை அறிவித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் அட்டைக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழக மக்களுக்கு அரசி, சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் போன்றவை குறைந்த விலையில் மற்றும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

பாமாயில் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கும் துவரம் பருப்பு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் என ரேஷன் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்றும் வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொடுக்கப்படுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதற்கான தீர்வினை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் பண்டிகை காலம் என்பதால் மக்களுக்கு இவை கிடைக்கும் நிலையில் இருப்பு வைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ரேஷன் கடைகளை கூடுதல் தினங்களில் திறக்கவும் மக்களுக்கு ரேஷன் கடை பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் படி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி குறைந்த விலையில் 15 மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ 499 -க்கு மளிகை பொருள் தொகுப்பானது, அமுதம் பிளஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளும் திறக்கப்படும் என்றும், ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.