இன்று முதல் காலை 9 மணி முதல் 12:30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் நேற்றுமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, காய்கறி மளிகை மற்றும் இறைச்சி கடைகள் மாலை 5 மணிவரையில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சென்ற முறை போடப்பட்ட ஊரடங்கில் மதியம் வரையில் மட்டுமே செயல்பட்டு வந்த நியாயவிலை கடைகள் தற்சமயம் மாலை 5 மணி வரையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அனைத்து மாவட்ட ஆட்சியாளர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் சென்னை உட்பட எல்லா மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் அதேபோல பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும் என்றும் மறு உத்தரவு வரும் வரை இந்த வேலை நேரம் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நோய்த்தொற்று நிவாரண நிதியில் இரண்டாவது தவணை தொகையான 2000 ரூபாய் மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பினை 15ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிச் செல்ல நியோகம் செய்வதை ஜூன் மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் ரேஷன் கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அட்டை தாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜூன் மாதம் 11 முதல் 14 ஆம் தேதி வரையில் முற்பகல் சமயத்தில் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை போல குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல சென்ற இரண்டு வாரங்களாக தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கு அமலில் இருந்த சமயத்தில் வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருக்கின்ற எல்லா சிக்னலும் செயல்படாமல் இருந்துவந்தது. ஆனால் தற்சமயம் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் அளவிற்கு வாகனங்கள் சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு சென்னையில் இன்று முதல் அனைத்து உயிரினங்களும் செயல்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்திருக்கிறது.