ராவணன் உருவ பொம்மையை அவசர ஊர்தியின் மேல் வைத்து கொண்டு வேகமாக செல்லும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது இந்த ராவணன் பொம்மை கொஞ்சம் சிதைந்த நிலையில் தான் இருக்கின்றது இந்திய வனத்துறை அதிகாரி சாந்தா நந்தா பதிவிட்டு இருக்கின்ற அந்த வீடியோவிற்கு 2020 ராவணன் அவசர ஊர்தியில் கொரோனா மருத்துவமனைக்கு செல்கின்றார் என்று எழுதப்பட்டு இருக்கின்றது.
இன்னொரு நபரான சரண் ராவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று பதிவிட்டு இருக்கின்றார்.
அந்த காணொளி இன்று காலையில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது பதிவேற்றம் செய்யப்பட்ட உடன் சுமார் 8,000 பேர் அந்த வீடியோவினை பார்த்து இருக்கிறார்கள் இந்த காணொளிக்கு பலரும் சிரிப்பதை போன்று கமெண்ட் செய்து இருக்கிறார்கள் முதல்முறையாக ராவணனை பாசிட்டிவ் என்ற வார்த்தை உடன் தொடர்பு படுத்தி உள்ளது என ஒருவர் தெரிவித்து இருக்கின்றார் ஆனாலும் இந்த காணொளி இந்தியாவில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
2020😳😳
Ravana going in Ambulance to COVID Hospital…. pic.twitter.com/v04Xw1wN8L— Susanta Nanda (@susantananda3) October 24, 2020