Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“புத்திசாலித்தனம் எங்கே”… இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி

“புத்திசாலித்தனம் எங்கே”… இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா  ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் 208 ரன்கள் சேர்த்தது.

இவ்வளவு பெரிய ஸ்கோர் சேர்த்தும் இந்திய அணி மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங் காரணமாக கடைசி ஓவரில் போட்டியை இழந்தது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

போட்டியில் கொஞ்சம் கூட புத்திசாலித்தனம் இல்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். அவர் பேச்சில் “கடந்த சில ஆண்டுகளால இருந்த இந்திய அணியை நீங்கள் பார்த்தால், இளமையும் அனுபவமும் சேர்ந்து இருந்தது. நேற்றைய போட்டியில் அது இல்லை. அதனால்தான் பீல்டிங் மோசமாக இருந்தது.

கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் பீல்டிங் பக்கங்களைப் பார்த்தால், பீல்டிங் என்று வரும்போது இந்த அணி எந்த அணியை விடவும் சிறப்பக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அது பெரிய போட்டிகளில் நமக்கு கைகொடுத்தது.

அதாவது, ஒரு பேட்டிங் அணியாக நீங்கள் ஆட்டத்திற்குப் பிறகு 15-20 ரன்கள் எடுக்க வேண்டும். போட்டியைப் பார்த்தால் புத்திசாலித்தனம் எங்கே என்று சொல்லுங்கள்? ஜடேஜா இல்லை. புத்திசாலித்தனம் எங்கே? அந்த எக்ஸ்-காரணி எங்கே?” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Exit mobile version