இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
124

தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் யாரும் வங்கிகளை நோக்கி சென்று தங்களது பணிகளை செய்வதில்லை. அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றார்கள்.

ஒரு சிலர் தாம் வைத்திருக்கும் வங்கி கணக்கு ஏடிஎம்களில் எடுக்கின்றனர். பலர் இங்கே ஏடிஎம் உள்ளதோ அந்த சென்டர்களில் போய் எடுத்துக் கொள்கின்றனர்.

அப்படி கூடுதலாக ஏடிஎம்கள் பயன்படுத்தினாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ 21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஏடிஎம் மூலமாக பணம் எடுத்தல் தொடர்பாக சில முக்கிய மாற்றங்களை கடந்த வியாழக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

அதன்படி இலவச வரம்புக்கு பின் அதிகமான பரிவர்த்தனைகளில் ஈடுபடும்பொழுது சம்பந்தப்பட்ட வங்கிகளால் பணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

1. சொந்த வங்கியில் இருந்து 5 இலவச பரிவர்த்தனைகள். தனது சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இருந்த பணம் எடுப்பதற்கு 5 இலவச பரிவர்த்தனையை பணம் எடுத்தல் மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு கொடுக்கிறது.

2. மற்ற வங்கிகளில் இருந்து 3 முதல் 5 வரை இலவச பரிவர்த்தனைகள். அதாவது ஒரு நகரில் வசிப்பவர்கள் அங்குள்ள ஏடிஎம்களில் பணம் எடுக்கும் பொழுது மூன்று இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். நகரங்களுக்கு வெளியே கிராமப் புறத்தில் இருப்பவர்கள் ஐந்து முறை இலவச பரிவர்த்தனை வழங்கப்படும்.

3. அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைக்கும் மேல் அதிகமாக உபயோகித்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்படும்.

4. வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ 15 முதல் 17 வரை, நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ 5 முதல் 6 வரையும் சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.