Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணமா? ரிசர்வ் வங்கி எடுக்க போகும் அதிரடி முடிவு!

Google pay மற்றும் phonepe போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கருத்து கேட்டிருக்கிறது. நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக யூபிஐ சேவை வசதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது அதனடிப்படையில், யு.பிஐ மூலமாக கூகுள் பே மற்றும் போன் பே மூலமாக கட்டணமின்றி பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

நாட்டில் சென்ற ஜூலை மாதத்தில் மட்டும் யு பி ஐ மூலமாக 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்திருப்பதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பங்குதாரர்கள் கருத்து தெரிவிக்க ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையதள டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது நாட்டில் தற்போது ஸ்மார்ட் போன் பயனர்கள் எல்லோரும் இயல்பாக செய்யக்கூடிய நடவடிக்கையாக இருந்து வருகிறது. எளிமையான டீக்கடை முதல் தங்க நகை வாங்குவது வரையில் அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் இணையதளம் டிஜிட்டல் பேமென்ட் வசதிகளாக கூகுள் பே, பேடிஎம், பீம் யு.பி.ஐ போன்ற பல்வேறு வழிமுறைகளில் மேற்கொண்டு வருகிறார்கள்.

மக்களின் அன்றாட பயன்பாடுகளில் இரண்டற கலந்துள்ள google pay போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தற்போது ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்ய பிடுங்கி இருப்பதாக தெரிகிறது சம்பவம் உண்டாக்கி இருக்கிறது இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தரப்பு சில விளக்கங்களை தெரிவித்துள்ளது.

அதாவது பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது. மின்னணு நிதி பரிமாற்றத்திற்கான உட்கட்டமைப்பிற்கான முதலீட்டை மீட்டெடுக்கும் நோக்கத்தில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. என்றும், இது குறித்து மக்கள் தங்களுடைய கருத்துக்களை கூறலாம் எனவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனை பொதுமக்களின் தினசரி வாழ்வில் முக்கிய அங்கமாக தற்போது வரையில் மாறியிருக்கிறது.

நாடு டிஜிட்டல் பண பரிவர்த்தனை பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமென்றால் நிச்சயமாக இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெறுவதற்கு கட்டணம் வசூலிப்பது என்பது தற்போது தேவையில்லாத ஒன்றுதான் என சொல்ல வேண்டும்.

மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு சேவையை திடீரென்று கட்டணச் சேவையாக மாற்றுவது பொதுமக்களின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும். இதனை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Exit mobile version