ரூ.500 நோட்டு குறித்த RBI யின் புதிய அறிவிப்பு!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!

0
236
RBI's New Notification on Rs.500 Note!! Must Know!!

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின் வரிசையாக 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில், தற்போது 500 ரூபாய் நோட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளை விடவும் 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன. இந்த அதிக புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டில் சில சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.அதாவது, போலி 500 ரூபாய் நோட்டுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மோசடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

500 ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் முக்கிய வழிமுறைகள் :-

✓ புதிய 500 ரூபாய் நோட்டுக்களில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் இருக்கும்

✓ செங்கோட்டை புகைப்படம் ரூபாய் நோட்டின் பின்புறத்தில் பதியப்பட்டிருக்கும்.

✓ இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் ஸ்டோன் கிரே நிறத்தில் இருக்கும்.

✓ 500 ரூபாய் நோட்டின் அளவு 63*150 மிமி ஆக இருக்கும்.

போலி ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் :-

✓ புதிய 500 ரூபாய் நோட்டு ஒளி ஊடுருவக்கூடியது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் புகைப்படம் வலது பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும், நீங்கள் இந்த புதிய 500 ரூபாட் நோட்டை மடக்கினால் ஆர்பிஐ-ன் சில எழுத்தக்கள் அதில் தெரியும்.

மேற்குறிப்பிட்ட இந்த வழிமுறைகளை வைத்து போலி 500 ரூபாய் நோட்டுக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். இதன் காரணமாகவே, இந்த முக்கிய தகவல்களை பொதுமக்களின் நலனுக்காக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.