Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள்: விடைத்தாள் திருத்தும் பணி ஒரே நாளில் நிறைவு.

Re-Exam results for 12th class students: Answer sheet valuations work completed in one day.

Re-Exam results for 12th class students: Answer sheet valuations work completed in one day.

மறுதேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 2 முதல் 24 வரை நடத்தப்பட்டன. அதில் கடைசி நாளில் இறுதித் தேர்வில் கொரோனாவின் அச்சத்தால் 34,482 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மேலும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மட்டும் ஜூலை 27 அன்று தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

அந்த மறுதேர்விலும் 876 பேர் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் 175 பேர் பள்ளி மாணவர்களும், மேலும் உள்ள 671 மாணவர்கள் தனித்தேர்வர்கள் ஆவர்கள்.

இதன்படி மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கு 21 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வானது சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் 519 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதிலும் 327 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதேபோல் எழுத வந்த மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு முடிவடைந்து, அதன் விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவடைந்தது.

விடைத்தாள் திருத்தும் பணியானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் ஒரேநாளில் முடிவடைந்தது.
மேலும் இந்த மறுதேர்வு முடிவுகள் ஜூலை 30 அன்று அதாவது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version