கோவாவில் பாஜக இதை செய்யத் தவறிவிட்டது! காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!

0
130

தமிழகத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது யோகி ஆதித்யநாத் மறுபடியும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.அதோடு உத்தரகாண்ட் மணிப்பூர் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.

ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் அந்த கட்சி தோல்வியை சந்தித்தது அந்த கட்சி. தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு கட்சி அந்த மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது ஆச்சரியத்திற்குரியது தான்.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 21 தொகுதிகள் தேவை என்ற சூழ்நிலையில், அதற்கான முயற்சிகளில் அந்த மாநில பாஜக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தற்சமயம் காபந்து முதலமைச்சராக இருக்கின்ற பிரம்மோத் சாவந்த் பாஜகவின் மத்திய பார்வையாளர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு பிறகு புதிய அரசு பதவியேற்பு விழா தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவருமான திகம்பர் காமத் கோவாவில் ஆட்சியமைப்பதை பாஜக தாமதப் படுத்துவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் பாஜக தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போவதாக அறிவித்திருந்தது. ஒரு வார காலம் கடந்து விட்ட சூழ்நிலையில், பாஜக அது தொடர்பாக எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜக ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்துவிட்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது ஆட்சியமைக்க அந்த கட்சி இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருப்பது துரதிருஷ்டவசமானது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு கோவாவில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து விதமான வாய்ப்புகளையும் காங்கிரஸ் கட்சி ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கட்சி வேறுபாடில்லாமல் பல சட்டசபை உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அவ்வாறு காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்தால் பாஜகவின் சட்டசபை உறுப்பினர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அந்த ஆட்சியை கலைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.