சிம் கார்டு மூலையில் கட் செய்ய காரணம் என்ன? அறிந்து கொள்ளுங்கள்
நாம் என்னதான் மொபைல் போன்களை பழக்கத்தில் பழக செய்தாலும் அதற்கு சிம்கார்டு என்ற அந்த சிறிய கார்டு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. அந்த சிம் கார்டு இருந்தால் மட்டுமே அங்கு கம்யூனிகேஷன் நடைபெறும். சிம் கார்டை பலர் பார்த்திருக்கிறோம்.
அதன் ஒரு பக்க மூளை கட் செய்தது போல் இருக்கும். சிறு துண்டாக வெட்டப் பட்டு இருக்கும். அது ஏன் என்று உங்களுக்கு காரணம் தெரியுமா? அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள். இதற்கு ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு கைபேசிக்கு ஒரு சிம் கார்ட் மட்டுமே இருக்கும். அந்த காலங்களில் ஆரம்ப காலத்தில் நாம் வேறு மொபைல் அல்லது கைபேசி மாற்றும்போது இந்த சிம் கார்டுகளை எடுக்க முடியாமல் பலர் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் வேறு கைபேசிக்கு அந்த சிம்மை கொண்டு போட முடியாது. உங்களுக்கு முன் யாரந்த கைபேசியை உபயோகித்தார்கள் என்றே தெரியாமல், அவரது கணக்கிலேயே நீங்களும் அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. தற்போது காலங்கள் மாறியதன் காரணமாக தொழில்நுட்பங்களும் வளர்ந்துவிட்டன.
முதலில் வந்த சிம்கார்டுகள் எல்லாம் நுனியில் துண்டிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் புதிய கைபேசிகள் சந்தையில் வரிசையாக அறிமுகப்படுத்தப் படும் போது தான் இப்படி ஒரு தொழில்நுட்பத்தை தயாரிப்பு நிறுவனங்கள் செய்யத் தொடங்கின.
அவர்கள் இந்த மாற்றத்திற்கான தேடுதல் செயலை செய்யும் போது தான், அவர்களுக்கு மற்றொரு விசயமும் யோசிக்கத் தோன்றியது. எது மேல் பக்கம் கீழ் பக்கம் என்பதை கூட யோசிக்க வேண்டிய நிலையில் இருந்தது.
இதன் மேல் பக்கம் மற்றும் கீழ் பக்கங்களை அறிவிக்க நிறுவனங்களே கொஞ்சம் கஷ்டப்பட்டனர். அதன் பிறகுதான் சிம் கார்டில் ஒரு பக்கத்தில், சிறிய அளவில், வெட்டி எடுத்து அதன் மூலம் அதன் மேல் பகுதி, கீழ் பகுதி என்று தெரிந்து கொள்ளவும். அது சரியான பக்கத்தில் நாம் கூறுகிறோம் என்பதை தெரிந்து கொள்ளவும் ஏதுவாக வழிவகை செய்தனர்.
அதன் காரணமாக அதன் பின் தயாரிக்கப்பட்ட சிம் கார்டுகளில் அனைத்தும் ஒரு பக்க மூலையில் வெட்டப்பட்ட தயாரிக்கப்பட்டன எனவே மக்களும் குழப்பமில்லாமல் சிம் கார்டுகளை பயன்படுத்தும் சூழ்நிலைக்கு வந்தனர்