மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம் இது தான்

0
151
Reason for DMK Victory

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம் இது தான்

நடைபெற்று முடிந்த 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 350 மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தங்களுடைய ஆட்சியை அமைக்க உள்ளது.

இதில் பாஜக மட்டும் தனியாகவே  302  தொகுதிகளில் தனிபெரும்பன்மையுடன் வெற்றி பெற்றுள்ளது பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ வெறும் 52  தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று படு தோல்வியை தழுவியுள்ளது.

இந்த மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும் பாஜகவிற்கு ஆதரவாக முடிவை எடுக்க தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டும் மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேறு மாதிரியான முடிவை தந்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.எதிர்தரப்பில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி 1 தொகுதியில் மட்டுமே வெற்றி வேற முடிந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தமிழகம் முழுவதும் பாஜகவிற்கு எதிராக பிரதிபலித்த மக்கள் எண்ணமே. கடந்த பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மனமதிப்பிழப்பு நடவடிக்கை, GST வரி போன்றவை பெரும்பாலான தொழில்களை நசுக்கிவிட்டது உண்மையே ஆனால் நாடு முழுவதும் நேர்மறையாக பார்க்கப்பட்ட இந்த திட்டங்கள் தென் மாநிலங்களில் மட்டும் ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகளால் சித்தரிக்கபட்டுவிட்டன.முக்கியமாக அதிமுகவின் கோட்டையான தொழில்வளம் மிக்க கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட கொங்குமண்டலத்தில் அதிமுக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறமுடியவில்லை.

இதுமட்டுமில்லாமல்  திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பத்திற்கு மாதம் 6000 ரூபாய் தருவேன் என்றும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள் ஆக்குவேன் என்றும் கூறியது பெரும்பாலான மக்களை கவர்ந்துவிட்டது.

.ஏற்கனவே தமிழக மக்களை தள்ளுபடிக்கும் இலவசதிற்கும் அடிமையாக்கிய திமுக மீண்டும் தள்ளுபடி மற்றும் இலவச யுக்தியை கையிலெடுத்தது அதாவது விவசாயிகளும் மாணவர்களும் தாங்கள் வாங்கிய வங்கிக்கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. மேலும்  5 சவரனுக்கு குறைவாக அடகுகடையில் வைத்துள்ள தங்க நகைகளை இலவசமாக மீட்டு தருவோம் என்பதெல்லாம் கிராமம் நகரம் என்றில்லாமல் எல்லா பெண்களிடமும் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

இவ்வாறு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற அதிமுக சார்பாக அமைக்கப்பட்ட பாஜக கூட்டணி மீதிருந்த அதிர்ப்தியும்,இந்த திமுகவின் இலவச மற்றும் தள்ளுபடி வாக்குறுதிகளுமே முக்கிய காரணம். இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான ஊடகங்களை கட்டுபடுத்தி திமுகவின் கடந்த கால குறைபாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் பார்த்து கொண்டது அதே நேரத்தில் தங்களிடம் உள்ள ஊடகங்கள் மூலம் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பியதும் முக்கிய காரணங்களே.

இந்த தேர்தல் ஸ்டாலின் வாரிசான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அரசியல் நுழைவை மட்டுமே உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் இவ்வளவு மக்களவை தொகுதிகளில் திமுக தலைமை பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சியை எதுவும் செய்ய முடியாமல் போனது தான் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி.