Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற காரணம் இதுதானா?!.. கசிந்த தகவல்!..

kalpana

Singer Kalpana: தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு டிராக் பாடியவரும், பல படங்களில் பாடியவருமான பாடகி கல்பனா ராகவேந்தர் நேற்று தற்கொலைக்கு முயன்றார் என்கிற செய்தி இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்பனாவின் அப்பா ராகேவேந்தர் 80களில் பல திரைப்படங்களிலும் நடித்திருப்பார். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் அப்பாவாக வருவார். பாலச்சந்தரின் இயக்கிய சிந்து பைரவி படத்தில் சுஹாசியின் ஸ்டெப் ஃபாதராக வருவார்.

என் ராசாவின் மனசிலே படத்தில் வரும் போடா போடா புண்ணாக்கு படம்தான் கல்பனா பாடிய முதல் பாடல். அதன்பின் பல படங்களிலும் பாடியிருக்கிறார். இதுவரை 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இடம் பெற்ற கொடி பாக்குற காலம் பாடலை பாடியதும் கல்பனாதான்.

இதுபோக விஜய் டியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் சிங்கர் மற்றும் ஸ்டார் சிங்கர் ஜுனியர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்து வந்தார். மேலும் சூப்பர் சிங்கர் சீசம் 10 நிகழ்ச்சியிலும் ஜட்ஜாக இருந்தார். தமிழ் போக பல தெலுங்கு படங்களிலும் பாடியிருக்கிறார். மேலும், தெலுங்கு மொழி டிவி நிகழ்ச்சிகளிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளுக்கு ஜட்சாக இருந்தார்.

kalpana
kalpana

இவர் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில்தான், இவரின் வீட்டு 2 நாட்களாக உட்புறம் தாளிடப்பட்டிருந்தது. எனவே, உறவினர்கள் ஹைதராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கல்பனா வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்திருக்கிறது.

கல்பனாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார். அதோடு, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள் இருந்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் கல்பனா தற்கொலை செய்யும் முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Exit mobile version