வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. நிதி நிறுவனங்களுக்கு இடையே விதிகள் மாறுபடலாம். ஆனால் வங்கிகளை பொறுத்தவரையில் ஒரு சில விதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஒரு நிலையான நிதியாண்டல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும்போது இன்கம் டேக்ஸ் நோட்டஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று எஸ்டி கல்லில் 10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தால் கூட வருமானவரித்துறை உங்களிடம் அந்த பணத்திற்கான ஆதாரம் குறித்து விசாரிக்கலாம்.
சொத்து வாங்கும் பொழுது 30 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்திருந்தால் அதாவது பணமாகவே கொடுத்து சொத்தினை வாங்கி இருந்தால் சொத்து பதிவாளர் கண்டிப்பாக இது குறித்து வருமான சொத்து பதிவாளர் கண்டிப்பாக இது குறித்து வருமான வரித்துறையினருக்கு தெரிவிப்பார். அதன்மூலம் உங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து இந்த ரொக்க பணம் குறித்த கேள்விகள் எழுப்பப்படலாம்.
இவை மட்டுமில்லாமல் உங்களுடைய கிரெடிட் கார்டில் ஒரு லட்சம் அல்லது அதற்கு அதிகமாக பில் செலுத்தப்பட்டிருந்தால் அந்த பணத்திற்கான ஆதாரம் என்னவென்று வருமானவரித்துறை சார்பில் கேட்கப்படலாம். உங்களுடைய கிரெடிட் கார்டு குறித்த ஆதாரங்கள் வங்கியின் மூலமாக வருமானவரித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
வருமானவரித் துறையின் எச்சரிக்கை :-
பத்திரங்களை வாங்குதல், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்கள் வாங்க அதிக அளவு பணம் பயன்படுத்தப்பட்டால் வருமானத்துறை உங்களை நேரடியாக கேள்வி கேட்கும் உரிமையை பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்கிறார் என்றால் இது குறித்த தகவலை அந்த வங்கியானது வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்க வருமானவரித்துறை அதன் அடிப்படையில் உங்களிடம் கேள்விகள் கேட்பதற்கான உரிமையை பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.