திருமணம் முடிந்தவுடன் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுப்பதற்கான காரணங்கள் என்னவென்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தாலி கட்டு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபின்பு மணமக்களை மணமகன் வீட்டிற்கு கூட்டிச் செல்லும்போது படியிலிருக்கும் அரிசையை காலால் தள்ளிவிட்டு உள்ளே செல்வதும் , விளக்கேற்றுவதும் போன்ற வழக்கங்களோடும் பாலும் பழமும் தருவர்.இந்த பாலும் பழமும் எதற்காக கொடுக்கப்படுகிறது என்பது பெரும்பாலோனோருக்கு தெரியாத ஒன்றாகவே இருக்கின்றது.அது எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதனை இப்பதிவில் காணலாம்.
முதலில் ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து இருவரையுமே குடிக்க சொல்வர். மீண்டும் ஒரே பழத்தை இருவரையும் சாப்பிடச் சொல்வார் இதற்கு காரணம் இருவரும் வேறு வேறு இல்லை இரண்டில் ஒருவர் என்பதனை உணர்த்தவே இதுமட்டுமல்லாமல் பாலும்-பழமும் கொடுப்பதற்கு சில உள்ள அர்த்தங்களும் உள்ளன அதைப் பற்றிக் கீழே பார்ப்போம்.
முதலில் பெண்ணிற்கு கொடுப்பதற்கான காரணங்களைப் பார்ப்போம் : பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் புதிய குடும்பத்தோடு வாழ வருவதால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களோடு அந்த பெண்ணிற்கு பெரிதும் புரிதல் என்பது இருக்காது.
பசு மாடு எப்படி நஞ்சையே உண்டாலும் அதை கழுத்திலையே வைத்துக்கொண்டு நஞ்சு இல்லாத தூய்மையான பாலையே நமக்குத் தருமோ,அதுபோன்று புகுந்தவிட்டார் கடும் சொற்களை கூறிய விட்டாலும் அவர்களிடையே கோபத்தைக் காட்டாமல் நல்ல சொற்களோடு நல்லதையே செய்ய வேண்டும் என்பதற்காக பாலையும்,வாழைப்பழம் எப்படி விதையே இல்லாவிடினும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அதுபோல் கணவனைச் சார்ந்து வம்ச விருத்தியை நீ தரவேண்டும் என குறிக்கவும் வாழைப்பழம் தரப்படுகிறது.
மணமகனுக்கு பாலும் பழமும் தர காரணம் : மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அது போல் இந்த பெண்ணிடம் நிறையும் குறைகளும் உள்ளது அதை பக்குவமாக சரித்து உரைவிட்டு கடைந்து நல்ல வெண்ணையாக எடுப்பாயாக என்று பாலையும்
வாழை மரத்தை எப்படி அதன் தாய் மரத்திலிருந்து பக்குவமாகப் பிரித்து நடுகின்றோமோ அதேப்போல் இந்தப் பெண்ணை வேறொரு குடும்பத்திலிருந்து உங்கள் குடும்பம் என்னும் தோட்டத்தில் நட்டு உள்ளோம் அது பற்றுப் போகவிடாமல் பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்திசெய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலையும் காரணக்காரியம் இன்றியும் அர்த்தமில்லாமலும் முட்டாள் தனமாகவும் செய்வதில்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும்.