நம் நாடு முழுவதும் வருகிற 22-ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மக்களோடு மக்களாக சேர்ந்து வழிபடுவது பொதுவாக நம்மிடம் உள்ள வழக்கம். மேலும் சில குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகளை மக்கள் பலமாக கொண்டு சென்று அவர்களுக்கு அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பது நம் வழக்கமாக உள்ளது.
ஆனால் தற்போது உள்ள சூழலில் ஒரு நவீன அச்சுறுத்தலால் நாம் யாரும் கூட்டம் கூட இயலாது. இதனால் மக்கள் யாரும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து கூட்டம் கூடி விட கூடாது என்று நம் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் உத்தரவை எதிர்த்து மதுரையின் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு பிறப்பித்த தடை உத்தரவும் செல்லும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையே தமிழக அரசின் உத்தரவிற்கு காரணம் என்றும் தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய முடியாது என்றும் அறிவித்தது. ” சிலையை வைக்க ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? இது தமிழக அரசின் கொள்கை முடிவு. எனவே இதற்கு தடை செய்ய முடியாது “என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.