மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

0
197
Recently released information for 12th class students!! Go now!!

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 8.1  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மொழித்தாளுடன் தொடங்கினர். 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,559  பேர் முதல் தாளுக்கு வரவில்லை. காலை  8 மணி முதல், மாநிலம் முழுவதும் உள்ள 3,185  மையங்களில் மாணவர்கள் ஒன்று கூடத் தொடங்கினர்.

காலை 10  மணி முதல், வினாத்தாளைப் படிக்கவும், விவரங்களை சரிபார்க்க 15 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. மூன்று மணி நேர தேர்வு காலை  10.15 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.

பிளஸ் 2  பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. இதில் தமிழ்நாடு முழுவதும் 94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.  இந்நிலையில், பிளஸ் 2  பொது தேர்வு மறுகூட்டல்,  மறுமதிப்பிட் டுக்கு, மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் மறுமதிப்பீடு  அல்லது மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதே தளத்தில், “Application for Retotalling/Revaluation  என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த விண்ணப்பத்தை 2  நகல்கள் பூர்த்தி செய்து இன்று (மே 31)  தொடங்கி ஜூன் 3  மாலை  5 மணிக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டலுக்கான கட்டணமாக  உயிரியல் பாடத்துக்கும் ரூ.305  இதர பாடங்களுக்கு ரூ.205  செலுத்தவேண்டும். மறுமதிப்பீடுக்கு  ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505  கட்டணமாக செலுத்த வேண்டும்.  மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இந்த கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் என் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.