india: சமீப காலமாக இந்தியாவிற்கு வங்காள தேச நாட்டிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எப்படி பிரிந்ததோ அதே போல் வங்க தேசம் பிரிந்தது. வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வும் முஸ்லிம் மதத்தினர் பெருபான்மையினராகவும் இருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு போராட்டத்தினால் தற்போதைய வங்க தேசத்தில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்சிக்கு தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் இருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு பிரச்சனைக் காரணமாக பதவி விலகி ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். இவர் வங்கதேசத்தில் ஆட்சியில் இருக்கும் போது இந்தியாவுடன் நட்பு உறவில் இருந்தார். ஆனால், தற்போது தலைகீழாக மாறி இருக்கிறது.
இந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் வன்முறைகள் வெடித்து இருக்கிறது. அதை எதிர்க்கும் வகையில் இந்தியாவில் போராட்டம் நடைபெறுவதால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு புதுவித சிக்கலை ஏற்படும் வகையில் வங்க தேச அரசின் நடவடிக்கைகள் இருக்கிறது. அதாவது, இந்தியாவுடன் வங்க தேசம் 94 % சதவீதம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இந்த நிலையில் வட கிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கு மேற்கு வங்க “கோழி கழுத்து” என்ற எல்லைப் பகுதியில் ட்ரோன்களை பறக்க விட்டு இருக்கிறது வங்க தேச ராணுவம். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இஸ்ரேல் நாட்டின் தயாரிப்பான ஹெரான் டிபி (Heron TP) வகை ட்ரோன்களை மேற்கு வங்க எல்லையில் பறக்க விட்டு வருகிறது இந்திய ராணுவம்.