தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!

0
131

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சில தினங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சில கடைகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட்டது இந்த நிலையில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக. கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்ற காரணத்தால், ஒருநாளைக்கு 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதன் காரணமாக தற்போதைய இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிப்பது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் மருத்துவர் நிபுணர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாக்கிருஷ்ணன் போன்றோர் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் ஆரம்பத்தில் உரையாற்றிய ஸ்டாலின் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருப்பதாக தெரிவித்தார்.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீடிக்குமாறு மருத்துவ நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை மேற்கொண்ட ஸ்டாலின் சட்ட சபை உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.