Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே வாரத்தில் தைராய்டில் இருந்து மீண்டெழ.. கருஞ்சீரகத்துடன் இந்த காயை அரைத்து குடிங்க!!

தற்பொழுது ஆண்களைவிட அதிகளவு பெண்கள் தான் தைராய்டு பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த தைராய்டால் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.தைராய்டு பாதிப்பு தீவிரமானால் குழந்தையின்மை,கருவுறுதலில் தாமதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தைராய்டு அறிகுறிகள்:-

*சீரற்ற மாதவிடாய்
*உடல் எடை கூடுதல்
*மனச்சோர்வு
*மலச்சிக்கல்
*உலர் சருமம்
*மயக்கம்
*பதட்டம்
*தூக்கமின்மை
*முடி உதிர்வு
*எடை குறைதல்
*அதிக வியர்வை வெளியேறுதல்
*கை நடுக்கம்

நம் உணவில் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் தைராய்டு பாதிப்பு உண்டாகும்.அதேபோல் ஆட்டோ இம்யூனோ பாதிப்பு,தைராய்டு சுரப்பி அதிகமாக அல்லது குறைவாக சுரத்தல் போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

தைராய்டு பாதிப்பிற்கான எளிய வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – ஐந்து
2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஐந்து பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.நெல்லிக்காய் விதையை மட்டும் நீக்கிவிட வேண்டும்.

**அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை போட்டு ;லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மிக்சர் ஜார் எடுத்து வறுத்த கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து நெல்லிக்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த சாறை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அரைத்து வெந்தயம் மற்றும் கருஞ்சீரகப் பொடியை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து பருகி வந்தால் கூடிய விரைவில் தைராய்டு கட்டிகள் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பூ – ஒன்று

செய்முறை விளக்கம்:-

**அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த தேங்காய் பூவை தினமும் சாப்பிட்டு வந்தல்க் தைராய்டு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

**அதேபோல் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஹைப்பர் தைராய்டு முற்றிலும் குணமாகும்.

**தினமும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்த பானம் பருகி வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.

**தேங்காய் எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

**அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து பருகி வந்தால் தைராய்டு கட்டிகள் முற்றிலும் குணமாகும்.

**இஞ்சி,தைராய்டு பாதிப்பை முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது.நீங்கள் தினம் ஒரு கிளாஸ் இஞ்சி தேநீர் செய்து பருகி வந்தால் தைராய்டு பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.

Exit mobile version