வாட்டி எடுக்கும் கோடை வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக்கும் “செம்பருத்தி பூ”!! இதை எப்படி பயன்படுத்துவது?
கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது.இந்த கோடை காலத்தில் உடல் அதிகளவு சூடாக இருக்கும்.இதனால் வெயில் கால நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
அதாவது அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,கண் எரிச்சல்,கண் கட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதில் இருந்து தங்கள் உடலை காத்துக் கொள்ள செம்பருத்தி டானிக் குடிப்பது நல்லது.
செம்பருத்தி பூ சரும பரமப்பரிப்பிற்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.
செம்பருத்தி டானிக் எப்படி செய்வது/
நன்கு சிவப்பு நிறத்தில் உள்ள 10 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் செம்பருத்தி இதழ் மற்றும் 3 தேக்கரண்டி சர்க்கரை போட்டு கொதிக்க விடவும்.
செம்பருத்தி இதழின் நிறம் தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு நீரை நன்கு ஆற விடவும்.
பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி அரை எலுமிச்சம் பழ சாறு மற்றும் சிறிது ஐஸ்கட்டி சேர்த்து கலக்கி குடிக்கவும்.இவ்வாறு செய்தால் உடலில் உள்ள சூடு குறைந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும்.