“ரத்த நிலா” பூமியில் வழக்கத்தை விட அதிகமாக பிரகாசிக்கும்! எந்த நாள் தெரியுமா?

0
226

வானில் மிகவும் அரிதான ரத்த நிலா வருகின்ற 26 ஆம் தேதி பூமியில் தென்படும் என்றும் கோல்கட்டா பிர்லா கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற 26-ஆம் தேதி பௌர்ணமியன்று வரப்போகின்றது..

 

இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் திவாரி கூறியதாவது, சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் பொழுது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்கிறோம். வரும் 26ம் தேதி மிகவும் அரிதான சந்திர கிரகணம் மாலை 3.15 முதல் 6.22 வரை நிகழ உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

முழு சந்திர கிரகணம் கிழக்கு, ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் காணலாம்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் 6.15 முதல் 6.22 மணிக்குள் சில நிமிடங்களுக்கு மட்டுமே காட்சியளிக்கும்.

 

அடி வானத்தில் நிலவு இருக்கும் என்பதால் சென்னை மும்பை டெல்லி நிலவு தெரிவதற்கான வாய்ப்பு கிடையாது.பூமியின் நிழலில் ஒரு சிறுபகுதியை மட்டும் நிலவு கடக்கும் பொழுதும் சந்திரனை காணலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

கிரகணத்திற்கு பின் நிலா ரத்த சிவப்பு நிறத்தில் மாறி வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக பிரகாசிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை “ரத்த நிலா” என்று அழைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.இது எதனால் ஏற்படுகிறது என்றால் பூமிக்கு மிக அருகில் நிலவு தென்படும் பொழுது ஒரு ஒளிச்சிதறல் காரணமாக ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

 

மேலும் அடுத்த ஆண்டு நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. அது மே 6 தேதி நிகழ உள்ளது. அதே போல் அதே ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் வரும் பொழுது இந்தியாவால் காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.