Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் மகனை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள்! கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த தம்பதியர்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆக்ரோஷமான போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, உக்ரைன் மிகப்பெரிய சேதங்களை கண்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா சுமார் 69 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தி தன்னுடைய ராணுவத்துடன் நுழைந்திருக்கிறது.

இதற்கு நடுவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனில் படித்துவந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதரகங்களுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியிருக்கிறது .

மேலும் இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் பல கட்டமாக விமானங்கள் அனுப்பப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் 4 மத்திய அமைச்சர்கள் கொண்ட சிறப்பு தூதர்கள் குழு அனுப்பியது அதன் மூலமாக உக்ரைனில் இருக்கக்கூடிய இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள பி.என். பாளையம் பகுதியில் தங்கராஜ், வளர்மதி உள்ளிட்ட தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கிரண் என்ற மகன் இருக்கிறார். இவர் உக்ரைனிலுள்ள மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், உக்ரேனில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ஆகவே பல தமிழக மாணவர்கள் அங்கு சிக்கி தவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கிரணின் பெற்றோர் தன்னுடைய மகன் சுரங்கங்களில் தங்கியிருப்பதாகவும், உணவின்றி தவித்து வருவதாகவும், தெரிவிக்கிறார்கள்.

அவர்கள் தன்னுடைய மகனை தமிழக அரசு மீட்டு தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மத்திய அரசு அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை போலந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளுக்கு அழைத்து வரவேண்டும் எனவும் அங்கிருந்து இந்தியாவிற்கு பத்திரமாக மீட்க படுவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், கிரண் படிக்கும் மருத்துவக் கல்லூரி டெனிப்ரோவில் அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அங்கிருந்து ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளின் எல்லைக்கு 1500 கிலோ மீட்டர் தூரமிருக்கிறது இந்தப் பகுதியிலிருந்து ,போலந்து ,ருமேனியா உள்ளிட்ட எல்லைகளுக்கு செல்ல சாலையை பயன்படுத்த இயலாமல் மாணவ,ர்கள் தவித்து வருகிறார்கள்.

1000 ரூபாய் கொடுத்தால்கூட காருக்கு பெட்ரோல் கூட கிடைப்பதில்லை எவ்வாறு இருக்கும் போது அவர்கள் எவ்வாறு வரமுடியும். ஆகவே தமிழக அரசு தன்னுடைய மகன் மற்றும் அவனை போல் சிக்கித்தவிக்கும் மற்ற மாணவர்களையும் அங்கிருந்து எப்படியாவது மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள் அந்த பெற்றோர்கள்.

Exit mobile version