அன்றாட வாழ்வில் வேலைப்பளு,ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் உடல் சோர்வை சந்திக்கும் நபர்கள் தினமும் புத்துணர்வுடன் இருக்க கீழ்கண்ட மூலிகை ரசம் செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளைப் பூண்டு – 10 பல்
2)கறிவேப்பிலை – ஒரு கொத்து
3)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
4)கருப்பு மிளகு – 1/2 தேக்கரண்டி
5)சீரகம் – 1 தேக்கரண்டி
6)புளி – நெல்லிக்காய் அளவு
7)சின்ன வெங்காயம் – 10
8)வர மிளகாய் – இரண்டு
9)தூதுவளை – ஒரு கப்
10)துளசி – கால் கப்
11)சுக்கு – ஒரு துண்டு
12)உப்பு – தேவையான அளவு
13)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
14)கடுகு – 1/2 தேக்கரண்டி
15)மல்லித் தழை – சிறிதளவு
16)வெற்றிலை – ஒன்று
17)பெருங்காயத் தூள் – சிறிதளவு
18)பிரண்டை – ஒரு கப்
செய்முறை விளக்கம்:
முதலில் கற்பூரவல்லி இலை,வெற்றிலை,துளசி மற்றும் பிரண்டையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பிறகு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து மிக்சர் ஜாரில் உரித்த வெள்ளைப்பூண்டு,சீரகம்,வர மிளகாய்,கரு மிளகு மற்றும் சுக்கு சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு சுடுநீர் நெல்லிக்காய் சைஸ் புளியை போட்டு 10 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
அடுத்து கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரியவிட்டு அரைத்த பவுடர் சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெற்றிலை,தூதுவளை முதலானவற்றை பாத்திரத்தில் போட்டு வதக்க வேண்டும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலந்துவிடவும்.ரசம் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பெருங்காயத் தூள் மற்றும் மல்லித்தழை சேர்த்து இறக்க வேண்டும்.
இந்த மூலிகை ரசத்தை தினமும் செய்து பருகி வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.சளி,இருமல் காலத்தில் இந்த மூலிகை ரசம் செய்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.