நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு! எல்லை மீறும் அரசு மருத்துவமனை!

0
109

நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு! எல்லை மீறும் அரசு மருத்துவமனை!

தஞ்சாவூரில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது நிறைமாத கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அழிக்க முடியாது என துரத்திய சம்பவம்.

தஞ்சாவூரில் உள்ள கண்டியூரை சேர்ந்தவர் ஷாகுல். இவரது மனைவி பெமினா. பெமினா ஒரு முதுகலை பட்டதாரி .ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்.இந்நிலையில் திருச்சி கேகேநகர் இச்சிகாம்பட்டி எம்ஜிஆர் நகரில் தனது தாய் வீட்டிற்கு சென்ற பெமினா எப்படியோ அங்கிருந்து திடீரென காணாமல் சென்றுள்ளார். நடந்து திருவெறும்பூர் வந்த பெமினா யாரோ ஒருவரிடம் பைக்கில் லிஃப்ட் கேட்டு வந்துள்ளார்.

அவர் மெதுவாகச் செல்லுங்கள் என்று அந்த நபரை வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த அந்த நபர் கணேசபுரம் ரவுண்டானா பகுதியில் தள்ளி விட்டுச் சென்றுள்ளார்.
காயமடைந்த பெமினாவை பெல் போலீசார் மீட்டு அருகில் உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.அங்கு சென்ற பெமினா அங்குள்ள மருத்துவர்களிடம் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து சிகிச்சை அளிக்க முடியாது என்று துரத்தி உள்ளனர்.

சிகிச்சை அளிக்க முடியாது என கூறியதை அடுத்து பெமினா நடந்தே துவாக்குடி காவல் நிலையத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் காந்திமதி அவருக்கு அறிவுரைகளை வழங்கி மேலும் கர்ப்பிணி என்பதால் அவருக்கு சாப்பிட உணவு வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் பல காவலர்களை அங்கு பார்த்த பெமினா பயந்து நீங்கள் அருகில் வந்தால் நான் வண்டியின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் காந்திமதி வாழவந்தான் கோட்டை தன்னார்வலர் அணிலாவிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தன்னார்வலர் ஆன அணிலா தனது தங்கை பிரியா மற்றும் வக்கீல் சாருமதி என்பவரையும் அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். வந்து பார்க்கின்ற பொழுது அருகில் உள்ள சேற்றில் விளையாடிக் கொண்டிருப்பதைக் பார்த்து சோகமுற்றார்.மேலும் தான் வைத்திருந்த உடைகளை பெமினாவிற்க்கு மாற்றி விட்டு விசாரிக்கும் பொழுது தனது குடும்பத்தை பற்றி பெமினா தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் காந்திமதி பெமினாவின் கணவன் ஷாகுல் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.விஷயத்தை அறிந்த ஷாகுல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளார்.ஷாகுல் மருத்துவமனைக்கு பெமினாவை அழைத்ததை தொடர்ந்து பெமினா நான் வரமாட்டேன் அங்குள்ள மருத்துவர்கள் என்னை தகாத முறையில் திட்டுகிறார்கள் என்று சொல்லியுள்ளார்.

என்ன என்று தெரிந்து கொள்ளவே ஷாகுல் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் பெமினா செய்ததை படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.வயிற்றில் குழந்தை அசைவு இல்லை எனவே ஸ்கேன் செய்யுங்கள் என்று  ஷாகுல் கூறியுள்ளார். அதற்கு ஊழியர்கள் இங்கு ஸ்கேன் வசதி இங்கு இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

குழந்தை உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று அல்ட்ரா ஸ்கேன் ஆவது செய்யுங்கள் என்று கெஞ்சிய பிறகு அல்ட்ரா ஸ்கேன் செய்து உள்ளனர்.ஸ்கேன் செய்த பொழுது குழந்தை வயிற்றில் எந்த அசைவும் இல்லை மற்றும் இதயத் துடிப்பு குறைவாக உள்ளது எனவும் கூறி கூறியுள்ளனர்.இதனால் ஆரம்ப கட்ட உதவிகளை மட்டும் செய்து சுமார் 11.40 மணி அளவில் தஞ்சைக்கு அனுப்பப்பட்டதாக தகவல் உள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அவரது செய்கைகள் குழந்தை போன்றதே ஆகும். அவர்களை குழந்தை போல பாவித்து உதவி செய்யுங்கள்.