Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்! 

பெண்களுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!

ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள வட்டார  ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜாண் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் 6 மாதங்கள் கணினி பயிற்சி முடித்திருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் தொடர்பான பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 28 வயதிற்கு உட்பட்ட பெண்களாக மட்டுமே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் 6 மாத காலம் கணினி இயக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் பெண் விண்ணப்பதாரராக மட்டுமே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். காலியாக உள்ள சம்பந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை பெற திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், இணை இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை அணுகி  விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version