ஆடைகள் இன்றி அரை நிர்வாண கோலத்தில் படுத்துக்கொண்ட சபரிமலை ரெஹானா பாத்திமா! மகனை வைத்து செய்த காரியம்

0
416
Rehana Fathima Released Controversy Video-News4 Tamil Online News

சமீபத்தில் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பயன்படுத்தி சபரிமலைக்கு சென்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் ரெஹானா பாத்திமா. காலம்காலமாக ஆண்கள்,சிறு பெண்குழந்தைகள் மற்றும் வயதான பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் அனைத்து பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சபரிமலை மலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பையடுத்து கனகதுர்கா மற்றும் பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர்.

இதனையடுத்து ரெஹானா பாத்திமா என்கிற பெண் சமூக செயற்பாட்டாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்று பக்தர்களின் கடுமையான எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டார். இதனையடுத்து, இந்து அமைப்புகள் ரெஹானா பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நேர்ந்தது. மேலும் இந்த சம்பவங்களை தொடர்ந்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரெஹானா பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்தும் நீக்கப்பட்டார்.

இதனையடுத்து சமூக ஆர்வலர் என்ற பெயரில் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.சபரிமலை விவகாரம் மூலமாக விளம்பரமான இவர் சமூக ஊடகங்களில் பேசப்படும் நபராகவும் மாறினார். சமூக ஊடகங்களில் இவர் பதிவிடும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் புதியதாக வேறொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய பதிவை வீடியோவுடன் இணைத்து ரெஹானா பாத்திமா வெளியிட்டார். ‘பாடி அண்டு பாலிடிக்ஸ்‘ என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில், உடலில் ஆடைகள் ஏதுமின்றி அரை நிர்வாண நிலையில் ரெஹானா பாத்திமா இருக்க அவரின் சிறு வயது மகனும் மகளும் ரெஹானா பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைகின்றனர்.

Rehana Fathima Released Controversy Video-News4 Tamil Online News
Rehana Fathima Released Controversy Video-News4 Tamil Online News

மேலும் இந்த பதிவில் உள்ள கேப்சனில் அவர், தன் அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்” என்றும் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வீடியோ வெளியான குறைந்த கால இடைவெளியில் சமூக ஊடகங்களில் கடும் வைரலானது.

இதனையடுத்து இந்த வீடியோவை பார்த்தவர்கள் அவருக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவால் கேரளாவில் அவருக்கு எதிராக சர்ச்சை வெடித்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் திருவல்லா காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.