தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
124
Rejection of postal ballots! Sudden announcement issued by the Election Commission!

தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அதற்கடுத்ததாக தபால் வாக்குகள் இந்த முறை அதிக அளவு செலுத்தப்பட்டுள்ளது.

வயது முதிந்தவர்கள்,ஊனமுற்றோர் ஆகியோர் தபால் வாக்குகள் போடலாம் என்று கூறியதால் இந்த முறை தபால் வாக்குகள் அதிகரித்து காணப்படுகிறது.ஓர் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு தபால் வாக்குகள் உள்ளது.ஒவ்வொரு தொகுதியிலும் 500 முதல் 5000 வரை தபால் வாக்குகள் உள்ளது.தபால் ஓட்டுக்களில் எந்த தபால் ஓட்டுக்கள் செல்லும் எந்த தபால் ஓட்டுக்கள் செல்லாது என்பதை அந்த மையத்தின் தேர்தல் அதிகாரி தான் முடிவு செய்வார்.

தபால் வாக்குகளை எந்தெந்த காரணங்களுக்காக நிராகரிக்கலாம்,தள்ளுபடி செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் 10  விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

13-C’ படிவ உறைக்குள் ‘13-A’படிவத்தில் உறுதிமொழி இல்லாமல் இருந்தால் தள்ளுபடி செய்ய வேண்டும்.

முறைபடி உறுதிமொழியில் வாக்களர்கள் கையொப்பமிட படாமல் இருத்தல் அல்லது சான்றொப்பமிட அதிகாரமுடைய அலுவலரால் முறைப்படி சான்றொப்பமிடப்படாமல் இருந்தாலும் நிராகரிக்கலாம்.

உறுதிமொழியின் மீது காணப்படும் வாக்குச்சீட்டின் தொடர் எண், படிவம், ‘13-B’இன் உள் உறையில் மேலொப்பமிடப்பட்ட தொடர் எண்ணிலிருந்து வேறுப்பட்டிருத்தல் தெரியவந்தால் நிராகரிக்கலாம்.

எதாவது ஒரு வாக்கு பதிவு செய்யாமல் இருந்தால் அது நிராகரிக்கப்படலாம்.

அதேபோல ஒரு வாக்காளருக்கு மட்டும் வாக்களிக்காமல் அதற்கு மேற்பட்டோருக்கு வாக்களித்திருந்தால் அது நிராகரிக்கப்படும்.

போலியான வாக்கு சீட்டு இருந்தால் அது நிராகரிக்கப்படும்.

வாக்கு செலுத்திய சீட்டு சேதமடைந்திருந்தால் அல்லது சிதைக்கப்பட்டிருந்தால் அது போலியான வாக்கு சீட்டு என்னும் அடிப்படையில் நிராகரிக்கப்படும்.

தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்காளருக்கு அனுப்பப்பட்ட உறையுடன் அது திருப்பி அனுப்பப்படவில்லை என்றால் அது நிராகரிக்கப்படும்.

வக்களிப்பவர் இவர் தான் என்று மறைமுகமாக கூறும் வகையில் குறியீடு அல்லது ஏதாவது எழுத்துக்கள எழுதப்பட்டிருந்தால் அந்த தபால் வாக்கும் நிராகரிக்கப்படும்.