தமிழகத்தில் மிக முக்கிய அரசியல் கட்சியாக விளங்கும் அவை திமுகவும் அதிமுகவும் தான்.ஆனால் தற்போது நிலவி இருக்கும் ஒரு சம்பவம் நமக்குப் பெரிய புதிர் போடுகிறது.தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அண்ணன் மகன் கே. கே. செல்வம் அவர்கள் திமுகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தமிழகத்தில் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கேகே செல்வம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இவர் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் மற்றும் அகில இந்திய மருத்துவ வணிகர் சங்க பொருளாளர் ஆவார். இவர் நேற்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்னால சிற்பம் கோபி நகர செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்