Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளம்பெண்ணை கடத்தியதாக கூறப்படும் இளைஞர்களின் வீட்டை உறவினர்கள் சூறையாடல் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே பட்டதாரி பெண் ஒருவர் கடத்தியதாக இளைஞர்களின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்.

அல்லிகுளம் கிராமத்தை சேர்ந்த முனியசாமியின் மகள் மூகாம்பிகை (20) என்பவர் கடந்த 14ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் சாயல்குடி காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் முனியய்யாவின் மகன் கோட்டைசாமி என்பவர் தான், தன் மகளை கடத்திச் சென்றதாக கூறி காணாமல்போன இளம் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.

மேலும், பெண்ணின் உறவினர்கள் உடன் சேர்ந்த அந்த இளைஞனின் வீட்டிற்கு புகுந்து ,அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று வீடு, கதவு, டிவி ,உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.

அனைத்துப் பொருள்களிலும் மறைக்கப்பட்டதனால் ஆத்திரமடைந்த முனியய்யா, சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .மேலும், இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக கூறப்படும் கோட்டைசாமி என்பவருக்கு தங்க முனியம்மாள் என்ற மனைவியையும், கலையரசன் என்ற மகனும் உள்ளனர்.

Exit mobile version