Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தளர்வுகள் அளிக்க முடியுமா என பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை கொண்டாடவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு, கொரோனா பரவலின் காரணமாக,சிலைகள் வைத்துக் கொண்டாடவும்,சிலைகளை ஊர்வலமாக சென்று கரைக்கவும் கூடாது.மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு கொள்ளுமாறும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து பொது வழக்கு தாக்கல் செய்தனர்.

கணபதி என்ற நபர் சிலையை வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் சென்று கரைக்கவும், அனுமதி வழங்குமாறு,
தாக்கல் செய்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள்,வழிபாட்டிற்கு பின் விநாயகர் சிலைகளை பெரிய கோவில்களில் முன் வைக்கலாமா?ஐந்து அல்லது ஆறு நபர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விநாயகரை நீர்நிலையில் கரைக்கலாமா?இது பாதுகாப்பானதா?மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு இது போன்ற சில தளர்வுகளை அளிக்கலாமா?
என்று தமிழக அரசிடம் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மிகப்பெரிய ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Exit mobile version