முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறப்பு!

0
131

மதுரை ராமநாதபுரம் தேனி உட்பட 5 மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்கிவரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, 136 அடியை எட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது .அதோடு மேலும் கரையோர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு இரண்டு மதகுகள் மூலமாக உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது, 13 மதகுகளில் 3 மற்றும் 4 வெளியிட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 534 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. அணைக்கு வரும் நீர்வரத்து பொருத்து உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

முல்லை பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கடலூர் வழியாக இடுக்கி அணைக்கு செல்லும் கேரளா இடுக்கி கலெக்டர் ஜார்ஜ் உபரி நீர் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.

நீர்மட்டம் 131 .20 அடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து கேரளாவிற்கு உபரிநீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. தற்போதைக்கு அணையில் 139.50 அடி வரை மட்டுமே நீர் தேக்க வேண்டும் என்று கேரள மாநிலம் கோரிக்கை வைத்திருக்கிறது. இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உடனடியாக நீர் திறந்துவிட கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்திருந்தார் .அணை விவகாரத்தில் தமிழக மற்றும் கேரள மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 142 அடி வரை நீர் தேக்க தமிழ்நாட்டிற்கு உரிமை இருக்கிற சூழ்நிலையில், உபரி நீர் திறந்து விடப்படுகிறது 152 அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் 2014 மற்றும் 2015 அதோடு 2018 உள்ளிட்ட ஆண்டுகளில் 142 அடி வரையில் தண்ணீர் சேர்க்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.