Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படத்தின் ரிலீஸ் காட்சிகள்!

Release scenes of the movie Lady Superstar Nayantara that fans are all looking forward to!

Release scenes of the movie Lady Superstar Nayantara that fans are all looking forward to!

 

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படத்தின் ரிலீஸ் காட்சிகள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகி திரை உலகில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் தான் வெளியாக இருப்பதாக தகவல் ஓன்று வெளியானது.

நயன்தாரா நடிப்பில் மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’நெற்றிக்கண்’. விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் சமீபத்தில் ரிலீசுக்கு தயாரானது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யப் போவதாகா பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது .இந்த நிலையில் தற்போது இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது இந்த திரைப்படத்தின் டீஸருக்கு கிடைத்த வெற்றியில் இருந்தே தெரியவந்துள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேர்வு செய்து கடந்த சில ஆண்டுகளாக  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் நிலையில் அவருடைய வெற்றி படங்களில் ஒன்றாக ’நெற்றிக்கண்’ திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version