வெளியானது “லியோ”!! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டாரா விஜய்?

0
206
#image_title

வெளியானது “லியோ”!! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டாரா விஜய்?

தமிழ் திரையுலகில் உட்ச நச்சத்திரமாகவும், வசூல் வேட்டையராகவும் திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கைதி, விக்ரம் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஆக்சன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே விஜய் – லோகேஷ் கூட்டணியில் மாஸ்டர் என்ற படம் வெளியாகி கதை மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனத்தை பெற்றது. மீண்டும் இந்த கூட்டணியில் எப்பொழுது படம் உருகவும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக லியோ படம் உருவாகியது.

கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்த நாள் அன்று இப்படத்தின் முதல் பாடலான “நான் ரெடி தான் வரவா” என்ற பாடல் வெளியாகி எதிர்மறை விமர்சங்களை பெற்றது. இந்த பாட்டில் வரும் சில வரிகள் இளைஞர்களை போதை பழக்கத்திற்கு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கூறி சமீபத்தில் இப்பாட்டில் வரும் சில சர்ச்சையான வரிகளை தணிக்கை குழு நீக்கி அதிரடி காட்டியது. இது லியோ படத்திற்கு வந்த முதல் சிக்கல். அடுத்து இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த லியோ படக்குழு திட்டமிட்டது. ஆனால் திடீரென்று ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்து விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா ரத்தானதற்கு பின்னால் அரசியல் சூழிச்சி இருக்கிறது. விஜய்க்கு பிரச்சனை கொடுக்கத் தான் ஆளும் கட்சி இவ்வாறு செய்கிறது என்ற விமர்சனத்தை விஜய் ரசிகர்கள் முன் வைத்து வந்தனர்.
இது தான் லியோ படத்திற்கு வந்த இரண்டாவது சிக்கல்.

லியோ படம் அக்டோபர் 19 அன்று வெளியாகுமென ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட லியோ படத்திற்கு அனுமதி வழங்கப்ட்ட நிலையில் இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் அவரச வழக்கு தொடரப்பட்டது. அதிகாலை 4 மணி காட்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ படத்திற்கு எதற்கு 5 காட்சிகள் என்று அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்ட்டது. இது தான் லியோ படத்திற்கு வந்த மூன்றாவது சிக்கல்.

இவ்வளவு எதிர்ப்பு, சிக்கல்ளுக்கு மத்தியில் லியோ படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்தியவில் மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணிக்கு லியோ படம் வெளியானது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து இருக்கும் நிலையில் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் படம் வெளியாகி என்றாலே ரசிகர்களுக்கு அது பண்டிகை, திருவிழா போன்று தான். அந்த வகையில் இன்று வெளியான லியோ படத்தை பார்க்க அனைத்து திரையரங்குகளிலும் விஜய் ரசிகர்கள் முந்தி அடித்துக் கொண்டு படத்தை பார்க்க ஆவலுடன் திரையரங்கிற்கு செல்கின்றனர். ஆக்ஷன் திரில்லர் படம் லியோ. எனவே குடும்பப் படம் விரும்பி பார்க்கும் நபர்களாக இருந்தால் லியோ படத்தை பார்க்க தியேட்டருக்கு வர வேண்டாமென்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அறிவித்தார். அவர் சொல்லியதைப் போல் படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்று விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டது.

இப்படம் பெரும்பலான ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். விஜய்யின் மற்ற படங்களைப் போல் அல்லாமல் விஜய் இதில் மாறுபட்டு நடித்திருக்கிறார் என்று பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பாதகவும், அடுத்த பாதி சற்று டல் அடிக்கிறது என்பதும் சிலரின் கருத்தாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ இன்டர்வெல் சீன் தரமாக இருக்கிறது. விஜய்யின் சண்டை காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது. விஜய் அழுகும் காட்சிகள் அனைவரின் கண்களையும் கலங்க வைத்து விட்டது என்பது சிலர் கருத்தாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் படம் என்றால் முதல் பாதி சாந்த்தமாகவும் இரண்டாவது பாதி ஆக்ரோஷமாகவும் இருக்கும். ஆனால் லியோ படத்தின் இரண்டாவது பாதியில் லோகேஷ் சற்று சொதப்பி விட்டார் என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். படத்தில் நடித்த அனைவரும் தங்களது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்றும் விஜய்க்கு அடுத்து அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ஒரு படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவினால் அப்படம் வெளியாகி சரியாக ஓடாது என்பது பொதுவான எண்ணோட்டம். ஆனால் லியோ படம் தாறுமாறாக அமைந்து விட்டது. இன்று தான் எங்களுக்கு தீபாவளி என விஜய் ரசிகர்கள் எக்ஸ் தள பக்கத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர். லியோ படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வரும் நிலையில் இன்றைய நாள் முடிவில் முதல் நாள் வசூல் ரூ.120 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று திரை விமர்சகர்கள் தெரிவித்து வருவதால் விஜய் ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கின்றனர்.