Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மரண வெயிட்டிங்! ஒரு வழியாக வெளியான வலிமை திரைப்படம்! குதூகலத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித் குமார் நடிப்பில் புவனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா பாடல்களை உருவாக்கி இருக்கின்றார்.

முன்னதாக பொங்கல் தினத்தன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நோய்தொற்று பரவலுக்கிடையே 100% திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. அதோடு அடுத்தடுத்து திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது இதன் காரணமாக, அஜித் ரசிகர்கள் விரக்தியடைந்து வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், அஜித் ரசிகர்களுக்கான அட்டகாசமான திரைப்படமாக உருவாகியிருக்கின்ற வலிமை திரைப்படம் இன்று அதிகாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இன்று காலை 4 மணி அளவில் வலிமை திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.

அதற்காக அதிகாலையிலேயே திரையரங்கிற்கு அஜித்குமார் ரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள். சில திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகத்தில் அஜீத்தின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

காலை முதலே திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மேளதாளத்துடன் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை திரைப்படம்தான் திரையிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், உள்ளிட்ட 4 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

பைக் ரேஸ், ஆக்சன், ஆகாயத்தில் அதிரடி சண்டை காட்சிகள் என்று வலிமை படக்காட்சிகள் அதகளம் செய்து வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version