Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!

Relief announcement for the families of those who died in the Kuwait fire!!

Relief announcement for the families of those who died in the Kuwait fire!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குவைத்தில் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். மேலும் இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

தற்போது குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும் தனி விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகின்றது.

இந்தியாவை வந்தடையும் தமிழர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அவை தவிர தீ விபத்தில் காயம் அடைந்து குவைத் நாட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் தொடர்பான விவரங்களை திரட்டி அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் இந்த தீ விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயாலக தமிழர் நலத்துறையின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இந்தியாவிற்குள் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண்: +91 1800 309 3793; அதேபோன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண்: +91 80 6900 9900, +91 80 6900 9901; இந்த எண்கள் மூலமாக தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version