தைராய்டு பிரச்சனைக்கு நிவாரணம்.. இந்த மூன்று பொருட்கள் சேர்த்த மூலிகை டீ!!

0
203
Relief for thyroid problem.. herbal tea with these three ingredients!!

பெண்களை குறிவைக்கும் நோய்களில் ஒன்று தைராய்டு.தொண்டை பகுதியில் உள்ள தைராய்டு ஹார்மோன் சீரற்று சுரப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த தைராய்டு சுரப்பியை சமநிலையில் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை டீயை பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை
2)உலர்ந்த பன்னீர் ரோஜா ஈதல்
3)கறிவேப்பிலை

செய்முறை விளக்கம்:-

ஒரு மாதத்திற்கு தேவையான மூலிகை டீ பொடி தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதற்கு முதலில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி பன்னீர் ரோஜா இதழை தண்ணீரில் அலசி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இதை காட்டன் துணியில் கொட்டி இரண்டு மூன்று நாட்களுக்கு நன்கு உலர்த்திக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 50 கிராம் கொத்தமல்லி விதையை போட்டு மிதமான தீயில் லேசாக வறுத்தெடுங்கள்.

அதன் பிறகு உலர்த்தி வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் பன்னீர் ரோஜா இதழை போட்டு ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு அரைத்து வைத்துள்ள மூலிகை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.டீ நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து சில நிமிடங்களுக்கு ஆறவிடுங்கள்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடியுங்கள்.இந்த மூலிகை டீயை தினமும் குடித்து வந்தால் ஒருசில மாதங்களில் தைராய்டு பாதிப்பு முழுமையாக குணமாகிவிடும்.