சனி பார்வை ஏன் நம் மேல் படுகிறது? அதனால் ஏன் இத்தனை துன்பங்களும் ஏற்படுகின்றது? ஒரு சில நேரம் இன்பத்தையும் அளிக்கும் சனி பகவான் எதனால் இப்படி செய்கிறார்? என்பதை அனைவருக்கும் இருக்கும் ஐயம்.
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணிய நன்மைகளும், அதேபோல் நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணிய செயல்கள் அதற்கு ஏற்றவாறு இந்த ஜென்மத்தில் இன்ப துன்பங்களை நாம் அனுபவித்து வருகின்றோம்.
முன்னோர்களின் சொத்தில் நமக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது என்று நாம் சொல்லிக் கொள்கிறோமோ? அதே போல் அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற பலன்கள் நம்மையே வந்து சேரும்.
இதுதான் நம் கர்மா என்று சொல்கிறோம். இதைத்தான் ஏழரை சனி ஆகிய சனி பகவான் பாரபட்சமின்றி அனைவருக்கும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி, அட்டமச் சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி என பல்வேறு உருவத்தில் அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்றவாறு பாரபட்சமின்றி தனது கடமையை அருமையாக செய்து வருகிறார்.
துன்பத்தை அளிக்கும் துன்பக் கர்மாவை குறைப்பது எப்படி?
1. ஊனமுற்றோருக்கு உணவு
2. எறும்புக்கு உணவு
3. நாய்க்கு உணவு
4. பசுவுக்கு உணவு
5. காகத்திற்கு உணவு
உங்களால் முடிந்தவரை தினமும் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து வகையான ஜீவன்களுக்கு ஒருவேளை உணவாவது அளித்து வந்தால் நீங்கள் செய்த பாவ கர்மாவை படிப்படியாகக் குறைக்கலாம்.
இறைவன் வழிபாடு:
1. ஆஞ்சநேயரை வணங்கி வந்தால் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
2. தேய்பிறை அன்று பைரவரை வணங்கி வந்தால் நல்லது நடக்கும்.
அனுமன் காயத்ரி மந்திரம், அனுமன் சாலிசா, பைரவர் காயத்ரி மந்திரம் ஆகியவற்றை தினமும் சொல்லி வருவதன் மூலம் கெடுபலன்களை குறைக்கலாம்.
ஏன் இதை நாம் ஜெபிக்க வேண்டும் என்ற பலருக்கும் ஐயம் தோன்றும். மந்திரங்களை சொல்வதன் மூலம் மனம் தெளிவுற்று நல்ல செயல்களை யோசிக்க தோன்றும். நல்ல செயல்கள் என்பது நல்ல எண்ணங்களில் இருந்து தோன்றி உருவாகும். அப்படி உருவாகும் பொழுது நல்லவை எவை என்று தெளிவாக யோசித்து முடிவெடுக்கும் தன்மை நம்மில் உருவாகும். அதை நான் மந்திரங்கள் நல்ல எண்ணங்களை நல்ல செயல்களை தூண்டும் விதமாக உள்ளது.
அதேபோல சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று இரண்டரை மணி நேரம் அளவு உட்கார்ந்து மனதை உருகி வேண்டி அவர்களை சரணடைந்தால் நல்லவை கண்டிப்பாக நடக்கும்.