கர்நாடகாவின் புளிகேஷி நகர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் தங்கை மகன் நவீன் என்பவர். நவீன்க்கும் அதே பகுதியை சேர்ந்த முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முகநூலில் மதம் தொடர்பான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் இந்து மற்றும் முஸ்லீம் மதத்தை மாறி மாறி விமர்சித்ததால் பகை முத்தியுள்ளது.இந்நிலையில் அயோத்தியில் ராமர் பூமி பூஜை நடந்த போது முஸ்லிம்கள் ராமரை விமர்சித்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நவீன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்தை ஷேர் செய்துள்ளார்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் முற்றியது.
கடந்த செவ்வாய்கிழமை அன்று,நவீன் முஸ்லிம்
மதவெறுப்பை தூண்டும் வகையில் தொடர்ந்து பதிவிட்டால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் வடக்கு பெங்களூருவில் உள்ள,எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மேலும் நவீனை கைது செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் இருந்தவர்கள் முழக்கம் எழுப்பினர் அப்பொழுது திடீரென்று சீனிவாசன் மூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியும் வெளியே இருந்த வாகனங்களையும் ஏரித்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார்
நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் குண்டடிபட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.மேலும் இந்த கணவர் இதில் 60 போலீசார் உட்பட மொத்தம் 140 பேர் இந்த கலவரத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருந்த பொழுதிலும் இந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
நவீன் மற்றும் எதிர் தரப்பினர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று
பெங்களூர் காவல் ஆணையர் கமல் பந்த் கூறியுள்ளார்.இவர்கள் மீது கலவரத்தை தூண்டியது, வன்முறையில் ஈடுபட்டது | பொதுச்சொத்தை சேதப்படுத்தியது,போலீசாரின் ஆயுதங்களை பறித்தது, உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மொத்தமாக 165 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.அங்கு தற்போது வரை பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசியல் பரப்பில் கூறப்படுபவை?
உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில் இந்த கலவரம் நன்கு திட்டமிட்டு நான்காயிரம் பேரை திரட்டி நடத்தப்பட்டுள்ளது.இதன் பின்னணியில்,எஸ்டிபிஐ,
பிடிஎஃப்,கேடிஎஃப் அழகிய அரசியல் கட்சிகள் இருக்கின்றது.கட்சியினர் இருக்கும் வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளன.எனவே இந்த ஆதாரங்களை வைத்து இந்த கட்சியினருக்கும் கலவரத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மத வெறுப்பை தூண்டும் வகையில் பதிவிட்ட நவீனுக்கு காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.அவர் பாஜகவை சேர்ந்தவர். காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியும் நவீனும் கடந்த 10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. மேலும் நவீன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டு வந்துள்ளார்.இதனால்தான் இந்த கலவரம் முற்றியது.இதனை தொடக்கத்திலேயே காவல்துறையினர் கண்டித்து இருந்தால் இவ்வளவு பெரிய கலவரம் நடந்து இருக்காது இந்த கலவரத்தில் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.